Homeசெய்திகள்இந்தியாபிரேசிலிடம் ஜி20 தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

பிரேசிலிடம் ஜி20 தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

-

 

பிரேசிலிடம் ஜி20 தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

இந்தியாவை அடுத்து ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரேசிலிடம் ஒப்படைத்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

ஜி20 மாநாட்டிற்காக மோடி குடிசைகளை மறைக்கிறார் – காங்கிரஸ்

டெல்லியில் உள்ள ‘பாரத் மண்டபத்தில்’ இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 18வது ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்கா, பிரேசில், சீனா, ரஷ்யா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆப்பிரிக்கா நாடுகள், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, வங்கதேசம், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்களும், சர்வதேச நிதியம், உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜி20 உச்சி மாநாட்டில் பருவநிலை மாற்றம், வர்த்தகம், பொருளாதாரம், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாரத் மண்டபத்தில் தேங்கிய மழைநீர்.. வெற்று வளர்ச்சி அம்பலமானதாக காங். விமர்சனம்..

இரண்டு நாள் ஜி20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பிரேசில் அதிபர் லுலாவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்.

MUST READ