spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகனரா வங்கியின் அதிரடி அறிவிப்பால்....வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

கனரா வங்கியின் அதிரடி அறிவிப்பால்….வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

-

- Advertisement -

 

கனரா வங்கியின் அதிரடி அறிவிப்பால்....வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

we-r-hiring

அரசு வங்கிகளில் வீட்டுக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் போன்றவற்றை பலரும் வாங்கியிருப்போம். அதன் தொடர்ச்சியாக அறிமுகமாகியிருக்கிறது மருத்துவ கடன்.

“ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு”- தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பேட்டி!

மத்திய அரசின் பொதுத்துறையைச் சேர்ந்த கனரா வங்கி தனது வாடிக்கையாளர்கள் மருத்துவச் செலவுகளை சமாளிக்க ‘Canara HEAL’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. மருத்துவக் காப்பீட்டு தொகையை விட கூடுதலாக மருத்துவச் செலவு ஏற்படும் போது, இந்த திட்டம் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த மருத்துவக் கடனுக்கு 11.55% முதல் 12.30% வரை வட்டி வசூலிக்கப்படும் என்று கனரா வங்கி அறிவித்திருக்கிறது. இதுபோன்ற மருத்துவக் கடன் சேவைகளை ஏற்கனவே வங்கி அல்லாத சில நிதி நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், தற்போது அரசு வங்கியும் இந்த சேவையை வழங்கத் தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

இதுமட்டுமில்லாமல் தனது வங்கியில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் பெண்களுக்கு கனரா ஏஞ்சல் திட்டம் மூலம் கேன்சர் கேர் பாலிசி, முன் கூட்டியே ஒப்புதல் அளிக்கப்பட்ட தனிநபர் கடன், டேர்ம் பாலிசிகளுக்கு கடன் வழங்குதல் போன்ற சேவைகள் வழங்கப்படும் எனவும் கனரா வங்கி தெரிவித்துள்ளது.

MUST READ