Homeசெய்திகள்இந்தியாசீனாவின் 'ரிமோட் கண்ட்ரோலா' எலன் மஸ்க்..? இந்தியாவை அச்சுறுத்தும் ட்ராகன்..!

சீனாவின் ‘ரிமோட் கண்ட்ரோலா’ எலன் மஸ்க்..? இந்தியாவை அச்சுறுத்தும் ட்ராகன்..!

-

- Advertisement -

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கிறார். அதிபராக பதவியேற்ற பிறகு, சீனா உட்பட பல நாடுகள் மீது அதிக வரிகளை விதிப்பதாக டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார். இது இந்த நாடுகளுக்கு அமெரிக்காவில் வணிகம் செய்வதை கடினமாக்கும். மறுபுறம், டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, அவரது நண்பர் எலோன் மஸ்க் வலிமையடைவார்.

டிரம்ப் தனது நிர்வாகத்தில் மஸ்க்கிற்கு முக்கியமான பொறுப்பை வழங்கியுள்ளார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், உலகின் மிகப் பெரிய பணக்காரருமான எலோன் மஸ்க்கின் வணிகம் சீனா உட்பட உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவின் கார்கள் சீனாவில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், சூழ்நிலையில், டிரம்ப் உண்மையில் சீனா மீது அதிக வரிகளை விதிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது.

இந்தியா வருகை தரும் எலான் மஸ்க்!

சீனா மீது டிரம்ப் அதிக வரிகளை விதித்தால், சீனாவும் அதற்கு எதிர்வினையாற்றக்கூடும். இதனால் நஷ்டம் எலான் மஸ்கிற்கே… ஏனென்றால் சீனாவில் மஸ்க்கின் வணிகம் கொடிகட்டிப்பறக்கிறது. எனவே, சீனாவுடனான அமெரிக்காவின் உறவுகள் மோசமடைவதை அவர் விரும்ப மாட்டார். இதனால், சீனா, எலான் மஸ்க்கை ரிமோட் கண்ட்ரோலாகப் பயன்படுத்தலாம்.

சீனா தனக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் சமரசத்தை ஏற்படுத்த மஸ்க் மூலம் அழுத்தம் கொடுக்கக்கூடும். இரண்டு வல்லரசு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகக் கொள்கை பதட்டங்கள் அதிகரிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக விரைவாகத் தீர்க்கப்படுவதை சீனா விரும்புகிறது.தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, டிரம்ப் தன்னைச் சுற்றி ஏராளமான சீன ஆதரவாளர்களை வைத்துள்ளார்.

மஸ்க் மூலம் அமெரிக்காவுடனான தனது உறவை சீனா மேம்படுத்தினால், அது இந்தியா மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.சீனா மீது வரி விதிப்பது பற்றிய பேச்சு அடிபட்டதில் இருந்து, பல நிறுவனங்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன. அதே நேரத்தில், அமெரிக்காவுடனான இந்தியாவின் சுமுகமான உறவைக் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனங்கள் சீனாவிற்கு மாற்றாக இந்தியாவைப் பார்க்கின்றன. சீன நிறுவனங்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டால், இந்தியா அவர்களுக்கு ஒரு பெரிய சந்தையாக மாறக்கூடும். பல நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தொழிலைத் தொடங்கலாம்.

அதே நேரத்தில், சீனாவிற்கும்- அமெரிக்காவிற்கும் இடையே ஒரு சமரசம் ஏற்பட்டால், இந்த நிறுவனங்கள் சீனாவிற்கு மாற்றாகத் தேடுவதை நிறுத்திவிடும். ஏனென்றால், செலவைப் பொறுத்தவரை சீனா இன்னும் மற்ற நாடுகளை விட அதிக போட்டித்தன்மையுடன் உள்ளது. சீனாவும் முழுமையான விநியோகச் சங்கிலியைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியா பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.

MUST READ