Homeசெய்திகள்இந்தியாமத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்வாரா ? செய்ய மாட்டாரா? உடனே பதில் வேண்டும் -...

மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்வாரா ? செய்ய மாட்டாரா? உடனே பதில் வேண்டும் – CJP கெடு!

-

- Advertisement -

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் அமைப்பினரின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சர்

we-r-hiring

மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை & பிரதான் ராஜினாமா கோரிக்கை:

மத்திய அரசுடன் CJP அமைப்பின் இரண்டு பிரதிநிதிகள் சனிக்கிழமை (ஜூலை 25) மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இருப்பினும், பேச்சுவார்த்தை நடைபெறும் இடம் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்து அரசு “ஆம் அல்லது இல்லை” என்ற தெளிவான பதிலை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், CJP அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் மீது 13 முதல் தகவல் அறிக்கைகள் (FIR):

கடந்த ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை இதுவரை 13 முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளது.

  • ஜூலை 20 பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் காயமடைந்த மாணவர்களிடம் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

  • போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

  • நீட் தேர்வு கசிவு மற்றும் குளறுபடிகளால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா ₹1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகிய மத்திய அமைச்சர்களுடனான முந்தைய சந்திப்பில் CJP முன்வைத்துள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கைகள்:

வினாத்தாள் கசிவைத் தடுக்க கடுமையான சட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் தேசிய தேர்வு முகமையின் (NTA) 47 அதிகாரிகளின் சேவையை நீக்கம் செய்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

18 மெட்ரோ நிலையங்கள் மூடல்:

பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, மத்திய டெல்லியில் உள்ள குறைந்தது 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் தொடர்ந்து 4-வது நாளாக மூடப்பட்டுள்ளன. இதனால் டெல்லி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக் விளக்கம்:

மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் அரசுடன் எந்த ஒப்பந்தமும் (Deal) செய்யவில்லை; ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்கள் மீது ஒடுக்குமுறை பாயக்கூடாது என்ற அச்சத்தினாலேயே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன்” எனக் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாஜக அரசின் கிளை பிரிவு போல செயல்படும் த.வெ.க அரசு! – நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக் கடும் சாடல்!

MUST READ