தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரைச் சேர்த்த தேர்தல் ஆணையச் சட்டம், 2023-ஐ எதிர்த்த மனுக்களை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது தொடர்பான விவகாரத்தில் தீர்ப்பு


இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்குப் பரிந்துரைக்கக் கோரி மத்திய அரசு முன்வைத்த கோரிக்கை குறித்து, நீதிபதி திபாங்கர் தத்தா மற்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா அமர்வு தீர்ப்பு
தேர்தல் ஆணையர்கள் நியமன முறையை பொறுத்தவரை ::-
தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது அரசியல் அமைப்பு அமர்வு விரும்பியிருந்தால் அது அவ்வாறே குறிப்பிட்டு இருக்கும்.
பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுற்றத்தில் பிரதமர் பரிந்துரைக்கப்பட்ட நபர் மாறுபட்ட நிலைப்பாடு எடுப்பாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாக இருப்பதுடன் சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளடக்காத ஒரு தேர்வு குழு அமைத்து இயற்றப்பட்ட சட்டம் மக்களின் கண்ணோட்ட சோதனையில் வெற்றி பெற வேண்டும்.
தேர்தல் ஆணையர்கள் தேர்வு குழுவின் மூன்றாவது உறுப்பினராக செயல்பட பிரதமரால் நியமிக்கப்பட்ட ஒரு அமைச்சர், பிரதமரின் முடிவுக்கு எதிராக கருத்தை வைக்க மாட்டார்.
எனவே இந்த விவகாரத்தை பொருத்தவரை வெறுமனே மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்புவதால் எந்த ஒரு தீர்வும் எட்டப் போவதில்லை அதனால் இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்ப வேண்டும்.
தேர்தல் ஆணையர்கள் நியமன விவகாரம் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றச் சட்டம் என்பதால், அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 145(3)-ன் கீழ் பெரிய அரசியலமைப்பு அமர்வு விசாரிக்க வேண்டும் என நீதிபதி சதீஷ் சந்திர சர்மா கருத்து தெரிவித்தார்.
ஆனால், ஏற்கனவே 2023 ‘அனூப் பரன்வால்’ வழக்கின் மூலம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு விட்டதால், இந்த இரு நீதிபதிகள் அமர்வே வழக்கின் தகுதி அடிப்படையில் விசாரிக்கலாம் என நீதிபதி திபாங்கர் தத்தா மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால்,
இந்த மனுக்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்காகவும், விசாரிக்கும் அமர்வைத் தீர்மானிக்கவும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பரிந்துரைக்கு அனுப்பப்படவுள்ளன.
