Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் பதிவான கொரோனா உயிரிழப்பு

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் பதிவான கொரோனா உயிரிழப்பு

-

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றுக்கு முதல் பலி உறுதி செய்யப்பட்டுள்ளது.

china corona

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதற்கான கட்டுப்பாடுகள் நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக எந்த ஒரு கொரோனா உயிரிழப்பும் பதிவாகாத உத்திராகண்ட் மாநிலத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 29ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக, டெஹ்ராடூன் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 65வயதுடைய நபர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு, நிமோனியா இருந்ததும் மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இதனால், அவருடன் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் மேலும் 2 பெருக்கு தொற்று பாதிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் உத்திராகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் கொரோனா கட்டுப்பாடு தீவுரப்படுத்தப்பட்டுள்ளது.

MUST READ