டிசம்பர் காலாண்டில் ஜிடிபி 4.4% சரிந்துள்ளது என்று புள்ளி விவர அமைச்சகம் அறிக்கை வெளியீட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஜிடிபி தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கடன் செலவுகள் தேவையை பாதித்ததால், டிசம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 4.4 சதவீதமாக சரிந்துள்ளது.
கடந்த அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களை குறித்து புள்ளிவிவர அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் தொடர்ந்து 2வது காலாண்டாக ஜிடிபி வளர்ச்சி குறைந்துள்ளது. ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி 13.5 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை – செப்டம்பர் வரையிலான காலாண்டில் 6.3 சதவீதமாக குறைந்தது.
தற்போது சந்தை மதிப்பீட்டில் மதிப்பீடான 4.7 சதவீதத்தை காட்டிலும் இன்னும் குறைவாக 4.4 சதவீதமாக சரிந்துள்ளது. ஆனாலும் 2022 – 23ம் ஆண்டில் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பீட்டு உள்ளது. இதுவே கடந்த 2021 – 22ம் நிதியாண்டில் 9.1% ஆக இருந்தது.