ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தனது தோழியான ஹமானியை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. இவர் தனது நீண்ட நாள் தோழியான ஹிமானி மோர் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தனது திருமணம் தொடர்பான அறிவிப்பை நீரஜ் சோப்ரா இன்று சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். அவர்களது நெருங்கிய உறவினர்கள் மத்தியில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இது தொடர்பாக நீரஜ் சோப்ரா வெளியிட்டுள்ள பதிவில், இந்த தருணத்தில் தங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு ஆசிர்வாதத்திற்கு நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அன்பால் பிணைக்கப்பட்டதாகவும், மகிழ்ச்சியுடன் இருந்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தியாவில் நீரஜ் சோப்ராவின் திருமணம் நடைபெற்றதாகவும், தற்போது புதுமண தம்பதியர் தேனிலவிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.