spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா“Great Job” -இந்திய பைக் நிறுவனங்களை பாராட்டிய ராகுல் காந்தி…

“Great Job” -இந்திய பைக் நிறுவனங்களை பாராட்டிய ராகுல் காந்தி…

-

- Advertisement -

தென் அமெரிக்காவில் இந்திய பைக்குகளை காண்பது பெருமையாக உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.“Great Job” -இந்திய பைக் நிறுவனங்களை பாராட்டிய ராகுல் காந்தி…

தென் அமெரிக்காவிற்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். தென் அமெரிக்காவில் பயணிக்கும் போது இந்திய தயாரிப்பு பைக்குகள் சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்ததை பார்த்த ராகுல் காந்தி அதனோடு புகைப்படம் எடுத்து அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

we-r-hiring

‘பஜாஜ்’ நிறுவனத்தின் ‘பல்சர்’ பைக் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ள ராகுல் காந்தி, ” பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பைக்குகள் தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் பார்ப்பது பெருமையாக உள்ளதாகவும், இந்திய நிறுவனங்கள் புதுமையான முயற்சிகளால் வெற்றி பெற முடியும்! முதலாளித்துவ ஆதரவாளர்களுடன் அல்ல! என தெரிவித்து இந்திய பைக் தயாரிப்பு நிறுவனங்களை “Great Job” என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பாராட்டியுள்ள நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் நிறுவனம் நம் தமிழ்நாட்டை சேர்ந்தது என்றும், தமிழ்நாட்டிற்கு முதன் முதலில் பேருந்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் என்பதும் இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளாா்.

விஜய் அரெஸ்ட்! திருமா செக்… டெல்லிக்கு ஓடு! விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!

MUST READ