Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் இன்று நடக்கிறது 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

டெல்லியில் இன்று நடக்கிறது 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

-

- Advertisement -
kadalkanni

டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது.

டெல்லியில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 53வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. எட்டு மாத இடைவெளிக்கு பின்னர் இந்த கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. கடைசியாக கடந்த ஆட்சியின் போது கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 07ம் தேதி இந்த கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் வரி விகித சீரமைப்பு குழு மாற்றியமைப்புக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெறவுள்ள 53வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டு, குதிரை பந்தயம், கேசினோ மீதான 28% வரி குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

MUST READ