Homeசெய்திகள்இந்தியாதொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு!

தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு!

-

 

நடுவானில் விமானத்தில் பயணியை தேள் கொட்டியது!
Photo: Air India

சுதந்திர தினத்தையொட்டி வரும் தொடர் விடுமுறைக் காரணமாக, முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கான விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

அதிமுகவுடன் முற்றும் மோதல்- அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

சுற்றுலா சீசன் களையிழந்ததையடுத்து, கடந்த எட்டு வாரமாக, விமான டிக்கெட்டுகளின் கட்டணம் குறைந்துக் காணப்பட்டது. தற்போது வார விடுமுறை சுதந்திர தினம் நெருங்குவதால், பல்வேறு பகுதிகளுக்கு ஆன்மீக பயணம் மற்றும் சுற்றுலாச் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் விமானப் பயணத்திற்கான கட்டணம் மீண்டும் உச்சம் தொட்டிருக்கிறது. குறிப்பாக, இன்று முதல் ஆகஸ்ட் 15- ஆம் தேதி வரை கோவா, கொச்சி, லே, போன்ற சுற்றுலாத் தளங்கள் மற்றும் மதுரை, திருப்பதி, ஆக்ரா உள்ளிட்ட ஆன்மீக நகரங்களுக்கு செல்வதற்கான விமானக் கட்டணம், வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து கோவா செல்வதற்கான சாதாரண நாட்களில் ரூபாய் 4,000 முதல் 5,000 வரை உள்ள கட்டணம், தொடர் விடுமுறையால் 18,382 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதேபோல், சென்னையில் இருந்து கொச்சி செல்வதற்கான கட்டணம் 12,709 ரூபாய் வரையிலும் லே செல்வதற்கான கட்டணம் 27,553 ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் படிக்கும், குடிக்குமான தேர்தல்- அண்ணாமலை

சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கான கட்டணமும் 12,807 ரூபாய் வரையிலும் உயர்ந்திருக்கிறது. விமான கட்டணங்களில் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ