spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுகவுடன் முற்றும் மோதல்- அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

அதிமுகவுடன் முற்றும் மோதல்- அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

-

- Advertisement -

அதிமுகவுடன் முற்றும் மோதல்- அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி செல்கிறார். அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா அழைப்பின் பேரில் பாதயாத்திரை பாதியில் நிறுத்திவிட்டு டெல்லி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நானும் துலாவிப்பார்த்தேன்; முதல்வர் வாயை திறக்கவே இல்லை - அண்ணாமலை தாக்கு

என் மண் என் மக்கள் என்னும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை கடந்த 28 தேதி தொடங்கி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று மதுரையில் யாத்திரை மேற்கொண்ட அவர், இன்று மதுரையில் பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை ரத்து செய்துவிட்டு, அண்ணாமலை இன்று பிற்பகல் அவசர பயணமாக டெல்லி செல்லவிருக்கிறார்.

we-r-hiring

அதனை தொடர்ந்து இன்று மாலை ஒன்றிய உள் த்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் நட்டாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே கருத்து மோதல்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அண்ணாமலை பயணம் மேற்கொள்ள உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

MUST READ