டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில், இனிமேல் தாம் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகவோ, அல்லது வழக்கறிஞர் மூலம் வாதிடவோ மாட்டேன் என அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.


இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், தமக்கு நீதியான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றிலும் சிதைந்துவிட்டதாகவும் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார். இதனால், தனது மனசாட்சியின் அடிப்படையில் முடிவு எடுத்துள்ளதாகவும், மகாத்மா காந்தி முன்வைத்த சத்தியாகிரகக் கொள்கையை பின்பற்றப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கை விசாரிக்கும் நீதிபதி சார்புடையவராக உள்ளதாக கூறி, அவரை வழக்கில் இருந்து விலக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான், வீடியோ மூலம் தனது முடிவை பொதுமக்களுக்கு கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
ஆந்திரா: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு – வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
