எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள பிரதான எதிர்கட்சிகளான காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் ஏற்கனவே 2 கட்டங்களாக பீஹார் மற்றும் கர்நாடக மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் , அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 6ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று இந்தியா’ கூட்டணி ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகள் இருப்பதால் அவர்கள் பங்கேற்கவில்லை கூறப்படுகிறது.