Homeசெய்திகள்இந்தியாதொகுதி மறுவரையறை விவகாரம்: நாளை கூடுகிறது ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

தொகுதி மறுவரையறை விவகாரம்: நாளை கூடுகிறது ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

-

- Advertisement -

தொகுதி மறுவரையறை விவகாரம்: நாளை கூடுகிறது ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம் – நவம்பர் 30 சிறப்புக் கூட்டத்தை முன்னிட்டு முக்கிய ஆலோசனை!தொகுதி மறுவரையறை விவகாரம்: நாளை கூடுகிறது ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நாளை (நவம்பர் 28) காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

வரும் நவம்பர் 30-ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இதற்கிடையே, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டில் எந்தவித சமரசமும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் என்னென்ன கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர், ஆலோசனைக் கூட்டத்தில் எத்தகைய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் மத்திய அரசு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்புக் கூட்டத்தை முன்னிட்டு, நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கருதப்படுகிறது.

“சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி உடையும் பேச்சுக்கே இடமில்லை!” – அசாம் கான் திட்டவட்டம்!

MUST READ