Homeசெய்திகள்இந்தியாகுடியுரிமை வேண்டுவோர் விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம்!

குடியுரிமை வேண்டுவோர் விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம்!

-

 

குடியுரிமை வேண்டுவோர் விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம்!

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019, நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், குடியுரிமை வேண்டுவோர் விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நட்பா? காதலா? மீண்டும் மீண்டும் ரசிகர்களை குழப்பும் ராஷ்மிகா…

“குடியுரிமைத் திருத்த சட்டம் 2019- ன் படி குடியுரிமை வேண்டுவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்; indiancitizenshiponline.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து குடியுரிமை பெறலாம். குடியுரிமைப் பெற விண்ணப்பிக்க ஏதுவாக மொபைல் செயலியும் தொடங்கப்படவுள்ளது” என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

https://indiancitizenshiponline.nic.in/Login என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட்டு, ‘Login’ செய்து விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்!

கடந்த 2014- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதிக்குள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, ஜெயின் மக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் உள்ளிட்டோர் குடியுரிமை வேண்டி விண்ணப்பிக்கலாம் என அந்த இணையதளப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ