Homeசெய்திகள்இந்தியாடி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி…மாநிலங்களவையில் பாராட்டு…

டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி…மாநிலங்களவையில் பாராட்டு…

-

- Advertisement -

டி-20 உலகக்கோப்பை போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ள இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அபார வெற்றி…மாநிலங்களவையில் பாராட்டு…குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற டி-20 உலக கோப்பையை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்தது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தி வெற்றி கோப்பையை கைப்பற்றியது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலராலும் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாடப்பட்ட நிலையில் பாராட்டுக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவையில் மாநிலங்களவை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் இந்திய கிரிக்கெட் ஆடவர் அணிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்திய கிரிக்கெட் அணி பெற்றுள்ளதாகவும் அதற்கு பாராட்டு தெரிவிப்பதாக மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதற்கு அவைகள் இருந்த எம்.பி.க்கள் அனைவரும் கைத்தட்டி பாராட்டினர்.

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

we-r-hiring

MUST READ