Homeசெய்திகள்இந்தியாபெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் சென்ற ஐ.பி.எஸ் அதிகாரி - கிண்டல் செய்த கும்பல் கைது

பெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் சென்ற ஐ.பி.எஸ் அதிகாரி – கிண்டல் செய்த கும்பல் கைது

-

- Advertisement -

நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் தனியாக நின்று பெண் பாதுகாப்பு குறித்து சாதாரண உடையில் இருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை போலீஸ் அதிகாரி என தெரியாமல் கேளி கிண்டல் செய்த 40 பேரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெண்களின் பாதுகாப்பை அறிய மஃப்டியில் சென்ற ஐ.பி.எஸ் அதிகாரி - கிண்டல் செய்த கும்பல் கைதுஐதராபாத் நகரின் மையப்பகுதியில் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி மேற்கொண்ட துணிச்சலான ‘ரகசிய நடவடிக்கை’ தற்போது ஒவ்வொரு பெண்ணுக்கும் சிந்தனைகளையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகிறது. நள்ளிரவில் ஐதராபாத் நகரில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள்? வெறும் அறிக்கைகளை வைத்து மட்டும் தீர்மானிக்காமல், களத்தில் உண்மைகளைக் கண்டறிய மல்காஜ்கிரி காவல் ஆணையர் சுமதி முடிவு செய்துள்ளாா். அதன் விளைவாக நடந்த நடவடிக்கை ஒரு கும்பலின் அராஜகத்தை அம்பலப்படுத்தியது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு ஐதராபாத் நகரம் அமைதியாக இருந்தபோது  ​​தில்சுக்நகர் பஸ் ஸ்டாண்ட்டில் சாதாரண உடையில்  ஐபிஎஸ் அதிகாரி சுமதி சீருடை பாதுகாப்பு காவலர்கள்  இல்லாமல் காக்கி சீருடை அணியாமல் இருந்தார்.

அப்போது அவரைக் கண்ட சிலர் ஒன்று, இரண்டு அல்ல சுமார் 40 பேர் அவரைச் சூழ்ந்துகொண்டனர். வருகிறாயா? ஒரு நாளைக்கு எவ்வளவு?” என்று ஆபாசமான கேள்விகளால் அவரைத் துன்புறுத்தினர். சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் அவரை ஒரு பைக்கில் துரத்தினார்கள். இருப்பினும், அவர் மனம் தளராமல், அதிகாலை 3:30 மணி வரை அங்கேயே இருந்து, ஒவ்வொரு  நடத்தையையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

we-r-hiring

அதன்பிறகு, உடனடியாக களத்திற்குள் நுழைந்த ஒட்டு மொத்த போலீசாரும் அந்த 40 பேரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். பிடிபட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவர்களும், ஊழியர்களும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் சிலர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்து தெரிய வந்தது.  இந்த நடவடிக்கை குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக மட்டுமல்ல, இது பெண்களுக்கான பாதுகாப்பு அமைப்பில் மாற்றத்திற்கான ஒரு போராகும். ஒரு ஐபிஎஸ் அதிகாரியே இவ்வளவு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார் என்றால், சாதாரண பெண்களின் நிலை என்னவாக இருக்கும்? அதனால்தான்  எங்கு துன்புறுத்தலை எதிர்கொண்டாலும், பயப்படாமல் பெண்கள் தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என்றார்.

மேலும் நான் அலுவலகத்தில் சும்மா உட்காராமல், நள்ளிரவில் சாலைக்கு வந்து சாமானிய மக்களின் வலியைப் தெரிந்து கொண்டால் தான்  உண்மையான களநிலவரம் தெரியும். பெண்களின் பாதுகாப்பிற்காக ஷீ டீம்ஸ் மற்றும் 100 போன்ற சேவைகள் உள்ளன என்பதையும், ஆபத்து ஏற்படும்போது அவர்கள் தைரியத்துடன் போலீசாரை அணுக வேண்டும் என்பதையும் இந்த நடவடிக்கை உறுதி செய்கிறது என்றார்.

படித்துக் கொண்டும் வேலை செய்து கொண்டும் இருக்கும் மாணவர்களும் இளைஞர்களும் இதுபோன்ற ஒழுங்கற்ற செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. பிடிப்பட்டவர்களுக்கு  அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தாலும், இது அனைவரின் பொறுப்பாகும். இரவில் சாலையில் ஒரு பெண் தனியாக இருப்பதைப் பார்த்தால், ‘பாதுகாப்பிற்காகக் குரல் கொடுக்கும்’ கலாச்சாரம் இருக்க வேண்டுமே தவிர, ‘துன்புறுத்தும்’ கலாச்சாரம் இருக்கக்கூடாது. ‘நள்ளிரவில் ஒரு பெண்  சுதந்திரமாக நடமாடுவதே உண்மையான சுதந்திரம்’ என்ற காந்திஜியின் வார்த்தைகளை மெய்ப்பிப்பதற்கான வழிகாட்டியாக இருப்பதாக பலர் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை பாராட்டி வருகின்றனர்.

எப்போது பதவி ஏற்பது? என உத்தரவு கேட்பதற்காக சேலம் புறப்பட்டார் முதல்வர் ரங்கசாமி

 

MUST READ