spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்...எண்ண, எண்ண குறையாத பணம்!

சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்…எண்ண, எண்ண குறையாத பணம்!

-

- Advertisement -

 

சோதனையில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்...எண்ண, எண்ண குறையாத பணம்!
Photo: PTI

ஒடிசாவில் மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு வரும் பணம் 290 கோடியை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

சென்னையை உலுக்கிய மிக்ஜாம் புயல்- விஜய் டிவி புகழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

ஒடிசாவில் இயங்கி வரும் மதுபான நிறுவனம், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, வருமான வரித்துறை அதிரடியாக சோதனை மேற்கொண்டது. லட்சக்கணக்கில் பணம் சிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோடிக்கணக்கில் தற்போது பணம் சிக்கியுள்ளது.

கடந்த டிசம்பர் 06- ஆம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்டப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து எண்ணி வருகின்றனர். இதற்காக, 40- க்கும் மேற்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எண்ண, எண்ண பணம் வந்துக் கொண்டே இருப்பதால், வங்கிகளில் இருந்து கூடுதலாக ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதுவரை எண்ணப்பட்ட தொகை 250 கோடி ரூபாய் என வருமான வரித்துறைத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, பணம் எண்ணப்பட்டு வருவதால், 290 கோடியைத் தாண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மழை வெள்ள நீரில் மூழ்கிய கொரட்டூர் இ எஸ் ஐ மருத்துவமனை மருந்துகள்!

எண்ணப்பட்ட பணக்கட்டுகள் வாகனங்கள் மூலம் அரசு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பணத்தைப் பத்திரமாக எடுத்துச் செல்லக் கூடுதலாக வாகனங்களை அனுப்பி வைக்கவும், வருமான வரித்துறை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

MUST READ