spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபஞ்சாப் மக்களவை தேர்தல்... சிறைக்குச் சென்ற காலிஸ்தான் ஆதரவாளர் முன்னிலை

பஞ்சாப் மக்களவை தேர்தல்… சிறைக்குச் சென்ற காலிஸ்தான் ஆதரவாளர் முன்னிலை

-

- Advertisement -

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதே சமயம், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தின் காதூர் சாஹிப் மக்களவை தொகுதியில் காலிஸ்தான் ஆதரவாளரும், வாரிஸ் பஞ்சாப் தே கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இவர் சுயேட்சை வேட்பாளராக போட்டிடுகிறார். அதேசமயம், இதே தொகுதியில் போட்டியிடும் பாஜக, ஆம் ஆத்மி வேட்பாளர்கள் பின்னிலையில் உள்ளனர். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாப் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

MUST READ