spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகர்நாடகா மாநில பா.ஜ.க. தலைவராக விஜயேந்திர எடியூரப்பா நியமனம்!

கர்நாடகா மாநில பா.ஜ.க. தலைவராக விஜயேந்திர எடியூரப்பா நியமனம்!

-

- Advertisement -

 

கர்நாடகா மாநில பா.ஜ.க. தலைவராக விஜயேந்திர எடியூரப்பா நியமனம்!
File Photo

கர்நாடகா மாநில பா.ஜ.க. தலைவராக விஜயேந்திர எடியூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

‘தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!

பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிவிப்பில், பா.ஜ.க.வின் கர்நாடகா மாநில தலைவராக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயேந்திர எடியூரப்பா செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 66 இடங்களை மட்டுமே பிடித்து தோல்வியைத் தழுவியது. காங்கிரஸ் கட்சித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்த தோல்வியைத் தொடர்ந்து, பா.ஜ.க.வின் மாநில தலைவராக இருந்த நலின்குமார் பதவி விலகியதை அடுத்து, அக்கட்சியின் மாநில தலைவரை நியமிப்பதில் இழுபறி நீடித்தது.

தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் – ஓ. பன்னீர்செல்வம்

அந்த பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் சி.டி.ரவி, சுனில்குமார், மத்திய அமைச்சர் ஷோபா ஆகியோருடன் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் இரண்டாவது மகன் விஜயேந்திர எடியூரப்பாவின் பெயரும் அடிப்பட்டது. இந்த நிலையில், விஜயேந்திர எடியூரப்பா தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பா.ஜ.க. மேலிடம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமசகர்கள் கருதுகின்றனர்.

MUST READ