spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகர்நாடகா அமைச்சர்களின் பட்டியல் வெளியானது!

கர்நாடகா அமைச்சர்களின் பட்டியல் வெளியானது!

-

- Advertisement -

கர்நாடகா அமைச்சர்களின் பட்டியல் வெளியானது!
Photo: Karnataka INC

கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

we-r-hiring

பதவியேற்பு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சார்பாக, காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

கர்நாடகா அமைச்சர்களின் பட்டியல் வெளியானது!
Photo: Karnataka INC

அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சருடன் இன்று பதவியேற்கவுள்ள 8 அமைச்சர்கள் அடங்கிய பட்டியல் வெளியானது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலையடுத்து 8 அமைச்சர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அத்துடன், சித்தராமையாவுக்கும் அனுப்பி உள்ளார்.

ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!

அதன்படி, பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஷமீர் அகமதுகான் ஆகிய 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர்.

MUST READ