Homeசெய்திகள்இந்தியாகர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறப்பு!

-

 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறப்பு!
File Photo

நடப்பாண்டில் முதல்முறையாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 5,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,886 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி நீர், கபிலா நதியின் மூலம் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாண்டியா மாவட்டம், ஸ்ரீ ரங்கப்பட்டினம் தாலுக்காவில் உள்ள கிருஷ்ணராஜர் சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,914 கனஅடியாக அதிகரித்துள்ளது. அந்த அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2,487 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

“கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது தர வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நாளை முதல் 1,000 கனஅடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ