spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமக்களுக்காக 7 மணி நேர தியானத்தில் கெஜ்ரிவால்

மக்களுக்காக 7 மணி நேர தியானத்தில் கெஜ்ரிவால்

-

- Advertisement -

நாட்டின் நிலமை மோசமாக உள்ளது; நாட்டை காப்பாற்ற 7 மணி நேர தியானத்தை தொடங்கினார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களும், நாடும் தீயவர்களிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும் எனக் கூறி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

we-r-hiring

நாட்டில் முன்னேற்றம் அடையாமல் உள்ள மருத்துவமனையையும், கல்வி நிலையங்களையும் மேம்படுத்தியவர்களை தீயவர்கள் சிறையில் அடைத்து விட்டதாகவும், நாட்டு மக்களுக்காக உழைக்க யாரும் இல்லாத நேரத்தில் நாட்டு மக்களுக்காக கவலைப்பட வேண்டும் என்பதால் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் என தியானத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லி ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தியதற்கு பிறகாக அரவிந்த் கெஜ்ரிவால் 7 மணி நேர தியானத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ