Homeசெய்திகள்இந்தியாஅடுத்தாண்டு மோடி தனது வீட்டில் கொடி ஏற்றுவார்- மல்லிகார்ஜூன கார்கே

அடுத்தாண்டு மோடி தனது வீட்டில் கொடி ஏற்றுவார்- மல்லிகார்ஜூன கார்கே

-

அடுத்தாண்டு மோடி தனது வீட்டில் கொடி ஏற்றுவார்- மல்லிகார்ஜூன கார்கே

2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தேசியக் கொடியை வீட்டில்தான் ஏற்றிவைப்பார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

Image

பிரதமர் நரேந்திர மோடி 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையிலிருந்து உரையாற்றுகையில் நாட்டிலுள்ள தனது 140 கோடி, குடும்ப உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, நமது நம்பிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது என்றார். அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 15 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு செங்கோட்ட்யில் நாட்டின் சாதனைகளை எடுத்துரைப்பேன் என சுதந்திர தின விழா உரையில் பிரதமர் மோடி பேசினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “அடுத்தாண்டு மீண்டும் தேசியக் கொடியை மோடி ஏற்றுவார், ஆனால் தன் வீட்டில் ஏற்றுவார். ஒருவரை வெற்றி பெற வைப்பது, தோல்வி அடைய வைப்பது மக்களின் கையில் தான் உள்ளது. பிரதமரின் பேச்சு ஆணவத்தை காட்டுகிறது.” என்றார்.

MUST READ