காங்கிரஸ் கட்சி ஒன்றும் எதிர்க்கட்சிகளின் பிக்பாஸ் அல்ல- மம்தா பானர்ஜி
ராகுலை பாஜக ஹீரோவாக கட்டமைப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் திரிணாமுல் கட்சி தொண்டர்களிடம் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்ப நாடாளுமன்றத்தை முடக்கி ராகுல்காந்தியை எதிர்க்கட்சிகளின் ஹீரோ ஆக்க பாஜக முயல்கிறது. பாஜகவை எதிர்த்து போராட காங்கிரஸ் தவறி விட்டது, காங்கிரஸ் கட்சி ஒன்றும் எதிர்க்கட்சிகளின் பிக்பாஸ் அல்ல. மேற்கு வங்கத்தில் இரு கட்சிகளும் ரகசிய உறவில் உள்ளது. ‘எதிர்க்கட்சியின் முகமாக’ ராகுல் காந்தி இருக்கும் வரை, மோடியை யாராலும் குறிவைக்க முடியாது. ராகுல் காந்தி பாஜகவின் மிகப்பெரிய சொத்து
ராகுல் காந்தி தலைவராக வேண்டும்… ராகுல் காந்தியை ஹீரோவாக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பாஜகவுக்கு முன்னால் காங்கிரஸ் தான் தலைகுனிகிறது. காங்கிரஸ், சிபிஎம் மற்றும் பிஜேபி ஆகியவை திரிணாமுலுக்கு எதிராக சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகின்றன” எனக் குற்றஞ்சாட்டினார்.