Homeசெய்திகள்இந்தியாகனவோடு இந்தியா வந்த நவமணி தற்போது!!!!

கனவோடு இந்தியா வந்த நவமணி தற்போது!!!!

-

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் நவமணி தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ள அவல நிலை..

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நவமணி , புனித பிரிட்டோ பள்ளியில் படித்த இவர், மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் விருது நகர் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் பட்டபடிப்புகளை முடித்தார். கணினி தொழில்நுட்பம் மீதான ஆர்வம் காரணமாக ஐ.பி.எம் நிறுவனத்தில் ஹார்ட்வேர் பொறியாளராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து அமெரிக்காவில் தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைத்து கலிபோர்னியாவில் சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கி குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தார்.

பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கனவோடு இந்தியா வந்த நவமணி தற்போது!!!!வேளாண்மை, விளையாட்டு, தனி மனிதனுக்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தன்னை வளர்த்த தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் ரஜினிகாந்தின் சிவாஜி பட பாணியில் இந்தியாவில் சாப்ட்வேர் தொழிலை தொடங்கும் என்னத்தில் பெரும் கனவோடு தமிழ்நாடு வந்தார்.

தமிழ்நாட்டில் சாப்ட்வேர் நிறுவனத்தை தொடங்கி நடத்திய இவர், தனது நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட ‘டெக் நெட் சொசைட்டி’ மென்பொருளை பி.எஸ்.என்.எல் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2010ம் ஆண்டி சிறப்பாக பயன்படுத்தியதை பார்த்து 2012ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கத்திலும் இதுபோன்ற மென்பொருளை பயன்படுத்துவதற்காக தொழிலதிபர் நவமணியை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் அணுகி அண்ணா பல்கலைக்கழக கணினித்துறை தலைவர் செல்லப்பா தலைமையில் எல்காட் நிறுவனத்தின் குழுவினர் இந்த மென்பொருளை ஆராய்ந்து பயன்படுத்தலாம் என அறிக்கை அளித்தனர்.

பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கனவோடு இந்தியா வந்த நவமணி தற்போது!!!!இவர்கள் தயாரித்த மென்பொருளை பயன்படுத்த 30 கோடி ரூபாய் செலவான நிலையில் அரசு 6 கோடியே வழங்கியது அதனை பொருட்படுத்தாமல் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் சங்கத்தில் இந்த மென்பொருளை பயன்படுத்தி கணினிமயமாக்கப்பட்ட பின் கூட்டுறவு சங்கம் நடத்துவதற்கான செலவி 11 கோடியிலிருந்து 6 லட்சம் ரூபாயக குறைந்தது. சங்கத்தின் வருட லாபம் 4 கோடியிலிருந்து 7 கோடிக்கு உயர்ந்தது. வைப்புநிதி 27 கோடியிலிருந்து 52 கோடியாக அதிகரித்தது. இதற்கிடையில் தமிழ்நாடு அளவில் எடுக்கப்பட்ட டெண்டருக்கு 3 ஆண்டுகள் கழித்தும் பணம் தராமல் இழுத்தடிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் நவமணி.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் கணினி மயமாக்கப்படும் என அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். டெண்டர் கோருவதற்கு முன் அப்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தனது வீட்டிற்கு அழைத்து பேரம் பேசியாதகவும் பேரத்திற்கு பணியாத நிலையில், வல்லுனர் குழு என்ற நாடகத்தை நடத்தி அவசர அவசரமாக அணுபவம் குறைந்த நிறுவனத்திற்கு முறைகேடாக டெண்டர் வழங்கியதாக குற்றஞ்சாட்டினார்.

இதனால் இவரது நிறுவனம் கடும் நிதி சிக்கலுக்கு ஆளாகி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலையில் தனது சொத்துக்களை இழந்து. நிதி நெருக்கடி காரணமாக நீதிமன்றத்தில் வழக்கையும் தொடர முடியாத நிலையில் கடந்த 2019ம் ஆண்டு கார் டாக்சி டிரைவராக பணியாற்றி வந்தார். போதிய வருமானமின்மை காரணமாக காரையும் விற்றுவிட்டார். உடல் நல குறைவுடன் உள்ள மனைவி தனது மகளுடன் உள்ள நிலையில் வாழ்க்கையில் தனக்கு நீதிகிடைக்க வேண்டும் என்பதற்காக போராடி தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ளார்.

பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கனவோடு இந்தியா வந்த நவமணி தற்போது!!!!இந்தியாவில் தொழில் தொடங்கி பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கனவோடு வந்த நவமணி தற்போது சென்னை அண்ணாநகர் பகுதியில் நடைபாதையில் உள்ளார். மீண்டும் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் பல இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியும் என நம்பிக்கையோடு தெரிவிக்கிறார். தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பார்கள், தனது பிரச்சனை முதலமைச்சர் கவனத்திற்கு சென்றால் நிச்சயம் நீதி கிடைக்கும் என காத்துக்கொண்டிருக்கிறார்.

MUST READ