Homeசெய்திகள்இந்தியாநிபா வைரஸ்- கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு

நிபா வைரஸ்- கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு

-

நிபா வைரஸ்- கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு

கேரளாவில் நிபா வைரஸ் தொடர்பாக புதிய பாதிப்புகள் இல்லாத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக நிபா வைரஸ் நோய், உறுதிச் செய்யப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவலைத் தடுக்கும் வகையில் நோய் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. இதனிடையே தொற்று பரவலை கட்டுப்படுத்த செப்டம்பர் 24 ஆம் தேதிவரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் நிபா தொற்று முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் தொடர்பாக புதிய பாதிப்புகள் இல்லாத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. எனினும், மாஸ்க் அணிவது கட்டாயானக்கப்ட்டுள்ள நிலையில், மதியம் 2 மணி வரை வங்கிகளும், இரவு 8 மணி வரை கடைகளும் திறந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ