Homeசெய்திகள்இந்தியாஒடிசா ரயில் விபத்து- 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு

ஒடிசா ரயில் விபத்து- 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு

-

ஒடிசா ரயில் விபத்து- 4 அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் ஓட்டுநர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை!

ஒடிசா மாநிலத்தில் பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 280- க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 700- க்கும் மேற்பட்டோர் கட்டக், பாலசோர், புவனேஸ்வர் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரின் மேற்பார்வையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, மீட்புப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் 4 பேரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டர் மொகண்டியிடம் இன்று விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாலிமார்- சென்னை கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு- ஹவுரா அதிவிரைவு ரயில் விபத்து தொடர்பாக விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

MUST READ