ஜி எஸ் டி வரிக்குறைப்புக்கு முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.டில்லியில் நேற்று நடைபெற்ற 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி., அடுக்குகளை, நான்கிலிருந்து இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மறு சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரும் 22-ம் தேதி முதல் 5, 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். 12 மற்றும் 28 விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் பா சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணக் குறைப்பு வரவேற்கத்தக்கது, ஆனால் இது 8 ஆண்டுகள் தாமதமானது. ஜிஎஸ்டியின் தற்போதைய வடிவமைப்பு மற்றும் இன்று வரை நிலவும் விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் விழுந்தது போல் ஆகிவிட்டது.இந்த மாற்றங்களைச் செய்ய அரசாங்கத்தைத் தூண்டியது எது என்று சிந்திப்பது சுவாரஸ்யமாக இருக்கும். மெதுவான வளர்ச்சியா? பெருகிவரும் குடும்பக் கடனா? குறைந்து வரும் குடும்ப சேமிப்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
நடிகர் சரவணன் மீது முதல் மனைவி ஆவடி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார்
