ஆவடி காவல் ஆணையரகத்தில் பிரபல திரைப்பட நடிகர் பருத்திவீரன் சரவணன் மீது அவரது முதல் மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.1990களில் முன்னனி நடிகராக வலம் வந்தவர் சரவணன். வைதேகி வந்தாச்சு, 1992 பொண்டாட்டி ராஜ்ஜியம், கிருஷ்ணன், 1992 அபிராமி சரவணன், 1993 மாமியார் வீடு அரவிந்த்,1993 சூரியன் சந்திரன், மருது, 1993 பெற்றெடுத்த பிள்ளை, குமார்,1993 நல்லதே நடக்கும் உள்ளிட்ட படங்களில் கதா நாயகனாக நடித்த பிறகு 2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படம் மூலம் துணை நடிகரானார். இதைத்தொடர்ந்து கோலாமாவு கோகிலா,அரண்மனை, ஜெயிலர் போன்ற படங்களில் நடித்தார். இவர் கடந்த 2003 ல் சூர்ய ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த 2015ல் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி பின்னர் 2019-ல் ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவியுடன் மாங்காடு அருகே மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் முதல் மனைவி தனியாகவும் இரண்டாவது மனைவி உடன் சரவணன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் முதல் மனைவி நடிகர் சரவணன் மீது ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தானும் சரவணனும் கடந்த 1996 முதல் 2003 ஆம் ஆண்டு வரை திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் அதன் பின்பு 2003 இல் திருமணம் செய்து கொண்டதாகவும் தான் கஸ்டம்ஸ் ஏஜென்ஸ் ஹவுஸ் பிசினஸ் செய்து வந்ததாகவும் அதில் வந்த வருமானத்தில் சரவணன் தன்னுடன் இருந்து வந்ததாக தெரிவித்தவர்.

தற்போது முதல் மனைவியான எனக்கு பராமரிப்பு தொகை 40 லட்சம் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். சரவணன் மற்றும் அவரது இரண்டாவது மணிவியும் சேர்ந்து அடிக்கடி தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுவதாகவும், ஆரம்ப காலகட்டத்தில் சரவணனுக்கு பொருளாதார ரீதியாக நிதி உதவி செய்து வந்ததோக குறிப்பிட்டாா். தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தன்னை அடித்து துன்புறுத்ததாகவும் சாப்பாடு கூட போடவில்லை என்றும் தற்போது தனது உறவினர்கள் கொடுக்கும் பணத்திலே உயிர் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளாா். மேலும் தனது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சரவணன் அவரது மனைவி ஸ்ரீதேவியும் காரணம் என தெரிவித்துள்ளார். தனது புகார் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
‘உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா?? அடித்து , உதைத்து விரட்டுவதற்கா? – அன்புமணி காட்டம்..!!