
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!
சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பு இன்று (மார்ச் 15) காலை 06.00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் தற்போதைய பெட்ரோல் விலை 100.75 ரூபாயாகவும், டீசல் விலை 92.34 ரூபாயாகவும் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.
கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்….. பாகற்காய் ஜூஸ் குடிங்க!
பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.