spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்..... பாகற்காய் ஜூஸ் குடிங்க!

கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்….. பாகற்காய் ஜூஸ் குடிங்க!

-

- Advertisement -

கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்….. பாகற்காய் ஜூஸ் குடிங்க!

காய்கறி வகைகளில் சத்து மிகுந்தவைகளில் பாகற்காயும் ஒன்று. இந்தப் பாகற்காய் இயல்பிலேயே கசப்பு தன்மை உடையதாக இருந்தாலும் அதிக மருத்துவ குணங்கள் கொண்டது. பாகற்காய் என்பது இரண்டு மடங்கு கால்சியம் சத்துக்களையும் இரண்டு மடங்கு பொட்டாசியும் சத்துக்களையும் கொண்டிருக்கின்றன. கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்..... பாகற்காய் ஜூஸ் குடிங்க!மேலும் இவை நீரழிவு நோய், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில் இவை கல்லீரல் பிரச்சனையும் சரி செய்கிறது. அதாவது பாகற்காயின் தோல் உரித்து அதன் விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். இப்போது நமக்கு பாகற்காய் ஜூஸ் கிடைக்கும். இதனை வடிகட்டி எடுத்து அத்துடன் இரண்டு ஸ்பூன் அளவு தேன், சில சொட்டு எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் உப்பு, மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்..... பாகற்காய் ஜூஸ் குடிங்க!இந்த பாகற்காய் ஜூஸ் கல்லீரல் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இதில் நாம் சேர்க்கும் மிளகு இருமலுக்கும் நல்ல மருந்தாக விளங்குகிறது. இந்த ஜூஸை அடிக்கடி பருகி வந்தால் உடல் வலிமை அதிகரிக்கும்.

we-r-hiring

இருப்பினும் எந்த ஒரு நோயாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு வீட்டு மருந்துகளை பயன்படுத்துவது நல்லது.

MUST READ