Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடியின் தாயார் காலமானார்; உடல் நல்லடக்கம்

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்; உடல் நல்லடக்கம்

-

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மேத்தா இதய சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நரேந்திரமோடியின் தாயார் திருமதி. ஹீராபென், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 100. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ”புகழ்பெற்ற 100 ஆண்டு சகாப்தம் இறைவனின் திருவடியில் இளைப்பாறுகிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடியின் தாயாருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

modi mom

இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், “தங்கள் அன்புத்தாயார் ஹீராபா அவர்களுடன் தாங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அனைவருமே அறிவோம். அன்னையின் இழப்பினால் உண்டாகும் வலி என்பது யாராலும் தாங்கிக்கொள்ள முடியாதது. தங்கள் தாயாரின் இழப்பினால் நான் அடைந்துள்ள துயரை விவரிக்கச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன். துயர்மிகு இந்நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். தாயாருடன் தாங்கள் கொண்டிருந்த அழகிய நினைவுகளில் அமைதியும் இளைப்பாறுதலும் பெறுவீர்களாக” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே குஜராத் மாநிலம் காந்தி நகரில் ஹீராபென் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்திய மோடி, பின்னர் அவரின் உடலுக்கு தீ மூட்டினார்.

MUST READ