Homeசெய்திகள்இந்தியாமத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு - யார் யாருக்கு என்னென்ன துறை?

மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு – யார் யாருக்கு என்னென்ன துறை?

-

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் நிர்மலா சீதாராமன் , ஜெய்சங்கர் , பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான், குமாரசாமி மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி , கிரி ராஜ் சிங், அஸ்வினி வைஷ்ணவ் பதவியேற்றனர். பிரகலாத் ஜோஷி மற்றும் விரேந்திர குமார் , ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜூஜூ பதவியேற்றனர். அன்னபூர்ணா தேவி மற்றும் ஹர்தீப் சிங் பூரி, சிராக் பாஸ்வான், கிஷண் ரெட்டி பதவியேற்றனர். குறிப்பாக பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, ஒன்றிய அமைச்சராக பதவியேற்றார். 36 வயதான இவர், இந்திய வரலாற்றில் மிகக் குறைந்த வயது ஒன்றிய அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் மீண்டும் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார்.

மோடியின் 3.o கூட்டத்தில் 2 கோடி இலவச வீடுகள்

இந்நிலையில் மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டும் அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பதவியும் இதேபோல் ராஜ்நாத் சிங்க்கும் தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியும், நிர்மலா சீதாராமனுக்கு தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் பதவியும், ஜெய் சங்கருக்கு தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஜேபி நட்டாவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவியும், நிதின் கட்கரி சாலைப் போக்குவரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் பதவியும், ஜிதன் ராம் மாஞ்சிக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் பதவியும், தர்மந்திர் பிரதானுக்கு கல்வித்துறை அமைச்சர் பதவியும், அஷ்வினி வைஷ்ணவ்க்கு ரயில்வே அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன.

 

 

 

MUST READ