spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!

பீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!

-

- Advertisement -

பீகார் தேர்தலில் அதிரடி மாற்றம்..!! பிரஷாந்த் கிஷோர் எடுத்த திடீர் முடிவு..!

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டியிருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தான் தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் அறிவித்துள்ளார்.

we-r-hiring

243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பிஹார் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி , காங்கிரஸ் தலைமையிலான மகாகத்பாந்தன் உள்ளிட்டவை இடையே நேரடி போட்டி நடைபெற்றாலும், புதிய அரசியல் தலைவர்களின் வருகை பிஹார் அரசியலில் பெரிதும் பேசப்படுகிறது. தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோரின் “ஜன் சுராஜ்” கட்சி இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை இதுவரை அறிவித்துள்ளது. இதில், பிரசாந்த் கிஷோர் எந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு இருந்த சூழலில், அவர் பீகார் மாநிலத்தின் கர்கஹாரி அல்லது ரஹோபூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. இருப்பினும் நேற்று இரவு ஜன் சுராஜ் கட்சி வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்ட இரண்டு தொகுதிகளிலும் வேறு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

இதனால் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனியார் செய்தி  நிறுவனத்திற்கு  பேட்டியளித்த பிரஷாந்த் கிஷோர், நடப்பு பிஹார் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் தனது கட்சியான ஜான் சுராஜ்க்கு 150 சட்டமன்றத் தொகுதிகளை இலக்காக நிர்ணயம் செய்துள்ளதாகவும், ஜனசுராஜ் கட்சி பீகார் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்திற்குள் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என 100 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்கள் சட்ட விரோதமாக சேர்த்த செல்வத்தை பறிமுதல் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், பிஹார் தேர்தலில் போட்டியிடும் லாலு குடும்பத்தை கடுமையாக விமர்சித்துள்ள பிரசாந்த் கிஷோர் , ‘அழுக்கு துணியில் படிந்த கரை’ போல லாலு குடும்பத்திற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளது’ என்றார்.  தற்போது ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலத்தில் ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் நிதீஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக வர மாட்டார் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

MUST READ