spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு- பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அமைச்சர் ரோஜா!

சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு- பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அமைச்சர் ரோஜா!

-

- Advertisement -

 

சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு- பட்டாசு வெடித்துக் கொண்டாடிய அமைச்சர் ரோஜா!
File Photo

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அமைச்சர் ரோஜா பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்.

we-r-hiring

திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள் வழங்கினார்

ஊழல் வழக்கில் விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வாதங்களுக்கு பிறகு சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, பலத்த பாதுகாப்புடன் ராஜமுந்திரி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனை வரவேற்கும் விதமாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், அமைச்சருமான ரோஜா தனது ஆதரவாளர்களுடன் வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினார். சந்திரபாபு நாயுடு செய்த ஊழல்கள் இனி ஒவ்வொன்றாக வெளி வரும் எனவும் கூறினார்.

மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் உள்ள ரோஜா, ஏற்கனவே சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ