
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பா.ஜ.க.வின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்குவதே இலக்கு”- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!
நாகாவர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் கட்சி விரும்பியதை நான் செய்து வருவதால், அக்கட்சியினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. ஊழல்கள் செய்து ராஜஸ்தான் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் மட்டுமே காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.
சாமானிய மக்களுக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலமாக ராஜஸ்தானை காங்கிரஸ் கட்சி மாற்றியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கான கவுன்ட்டவுன் தொடங்கி விட்டது” என்று விமர்சனம் செய்துள்ளார்.
“ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போல விளையாடினோம்”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!
மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு வரும் நவம்பர் 25- ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.