Homeசெய்திகள்விளையாட்டு"இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்குவதே இலக்கு"- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!

“இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்குவதே இலக்கு”- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!

-

- Advertisement -

 

"இந்திய ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்குவதே இலக்கு"- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டி!
Photo: ICC

ஆர்ப்பரிக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அமைதியாக்குவது தான் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான தங்கள் இலக்கு என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இடம் பெற உள்ள சுவாரசிய நிகழ்ச்சிகள் என்னென்ன தெரியுமா?

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (நவ.19) பிற்பகல் 02.00 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய கேப்டன் பேட் கம்மின்ஸ், ” கிரிக்கெட் மைதானத்தில் 1.30 லட்சம் பேர் இந்திய அணிக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவர். அது வியக்கத்தக்க ஒன்றாக இருக்கும். இறுதிப்போட்டியின் போது, ரசிகர்கள் அனைவரும் தங்கள் நாட்டு அணிக்கு ஆதரவாக ஆர்ப்பரித்து குரல் எழுப்புவது இயல்பு தான். ஆனால் அது போன்ற சத்தங்களை அமைதியாக்கும் போது கிடைக்கும் திருப்தி ஒரு விளையாட்டு வீரனுக்கு வேறு எதிலிலும் கிடைக்காது.

உலகக்கோப்பை யாருக்கு?- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!

அதுபோன்ற திருப்தியை இறுதிப்போட்டியின் போது அடைவதே தங்களது இலக்கு. இந்திய அணி உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வந்துள்ளது. ஆனால் அவர்களை வீழ்த்த இயன்றவரை தங்கள் அணி போராடும். தங்கள் அணி திறமையை முழுமையாக வெளிப்படுத்தவில்லை; இறுதிப்போட்டியில் வெளிப்படுத்துவதற்காக, சேமித்து வைத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ