Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பை யாருக்கு?- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!

உலகக்கோப்பை யாருக்கு?- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!

-

- Advertisement -

 

உலகக்கோப்பை யாருக்கு?- இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!
Photo: ICC

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று (நவ.19) மோதுகின்றன. குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (நவ.19) மதியம் 02.00 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளனர்.

“மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டாஸ் தேவை”- உயர்நீதிமன்றக் கிளை கருத்து!

தோல்வியே பெறாமல் அனைத்துப் போட்டிகளிலும் வென்று இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை இந்திய அணி வெல்லுமா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியும், இரண்டு முறை சாம்பியனான இந்திய அணியும் மோதுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2003 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணி கோப்பையை வென்றால், உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததற்கு பதிலடியாக அமையும். கடந்த 2013- ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பட்டம் வெல்லாத நிலையில், தற்போது வெற்றி பெற முனைப்புக் காட்டி வருகிறது.

சூரனை வதம் செய்த முருகன்…அரோகரா கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் 13 முறை சந்தித்திருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா அணி 8 முறை வென்றுள்ளது. உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டி, மழையால் ரத்தாகும் சூழலில் ரிசர்வ் நாளான நாளை ஆட்டம் நடைபெறும். நாளையும் ஆட்டத்தை நடத்த இயலாத பட்சத்தில் இரு அணிகளும் இணை சாம்பியனாக அறிவிக்கப்படும். இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் இறுதிப் போட்டி டை ஆகும் நிலையில் சிறப்பு ஓவர் முறை கையாளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ