
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை தேவை என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.

“11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
மருத்துவக் கழிவுகள் கொட்டிய லாரியை ஆலங்குளம் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து சென்னை உய்ரநீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (நவ.18) மாலை 05.00 மணிக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், “கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை தேவை; மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். பறிமுதல் செய்த லாரியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்துச் செய்து” உத்தரவிட்டுள்ளனர்.
பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் 2 கால்கள் முறிந்தன!
அத்துடன், பிற மாநில மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைப் பாராட்டத்தக்கது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


