Homeசெய்திகள்இந்தியாகைகோத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ பைனான்சியல்- பிளாக்ராக் நிறுவனங்கள்!

கைகோத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ பைனான்சியல்- பிளாக்ராக் நிறுவனங்கள்!

-

 

கைகோத்துள்ள ரிலையன்ஸ் ஜியோ பைனான்சியல்- பிளாக்ராக் நிறுவனங்கள்!
File Photo

செல்போன் சேவையில் இருந்து கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வரை, பல வகை வணிகங்களில் கோலோச்சி வரும் ரிலையன்ஸ் நிறுவனம், அடுத்து மியூச்சுவல் பண்ட் துறையிலும் முத்திரைப் பதிக்கத் திட்டமிட்டுள்ளது.

தானே கிரேன் விபத்து – 17 பேர் உயிரிழப்பு

ரிலையன்ஸிலிருந்து பிரிந்து புதிய ரிலையன்ஸ் ஜியோ பைனான்சியல் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. முதலீட்டு மேலாண்மைத் துறையில் கால் பதிக்கும், இந்நிறுவனத்தை மியூச்சுவல் ஃபண்ட் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக மாற்றும் முயற்சியில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி களமிறங்கியுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தான் சர்வதேச அளவில் நிதி முதலீட்டு மேலாண்மைத் துறையில் மிகப்பெரிய நிறுவனமாக உள்ள பிளாக்ராக் நிறுவனத்துடன் சம பங்கு முதலீட்டுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ பைனான்சியல்.

இதற்காக இரு நிறுவனங்களும் தலா சுமார் 1,234 கோடி ரூபாயை முதற்கட்டமாக முதலீடு செய்யவதாக அறிவித்துள்ளனர். முதலீட்டு நிதி மேலாண்மைத் துறையில் ஆழ்ந்த நிபுணத்துவம் உள்ள நிறுவனம் பிளாக்ராக் நிறுவனத்துடன் இணைவதால், எளியவர்கள் முதல் பணக்காரர்கள் வரை, அனைவருக்கும் பல முதலீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்த முடியும் என ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் ஹிதேஷ் சேத்தியா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பேசிய பிளாக்ராக் நிறுவனத்தின் தலைவர், இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றம், வளர்ந்து வரும் பொருளாதாரம், நுகர்வு அதிகரிப்பால் வர்த்தகத்துக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8- ஆம் தேதி விவாதம்!

முன்னதாக இந்தியாவில் வர்த்தகம் செய்து வந்த இந்நிறுவனம், கடந்த 2018- ஆம் ஆண்டு நாட்டில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

MUST READ