spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் - சமாஜ்வாதி எம்.பி. வலியுறுத்தல்!

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் – சமாஜ்வாதி எம்.பி. வலியுறுத்தல்!

-

- Advertisement -

மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

we-r-hiring

புதிய நாடாளுமன்ற கட்டிடம் கடந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்றம் திறக்கப்பட்ட போது மன்னர் ஆட்சி காலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. இந்த செங்கோலை பிரதமர் மோடி, சபாநாயகர் இருக்கையின் அருகே நிறுவினார். இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என மக்களவை சபாநாயகருக்கு சமாஜ்வாதி கட்சி எம்பி ஆர்.கே.செளத்ரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோவில், அரசர் அல்லது இளவரசரின் மாளிகை அல்ல . முடியாட்சி அல்லது ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக திகழும் செங்கோலை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

MUST READ