Homeசெய்திகள்இந்தியா'ரூபாய் 1- க்கு சானிட்டரி நாப்கின் முதல் புல்லட் ரயில் சேவை வரை'- பா.ஜ.க.வின் முக்கிய...

‘ரூபாய் 1- க்கு சானிட்டரி நாப்கின் முதல் புல்லட் ரயில் சேவை வரை’- பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகள்!

-

 

'ரூபாய் 1- க்கு சானிட்டரி நாப்கின் முதல் புல்லட் ரயில் சேவை வரை'- பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகள்!

டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பிரதமர் மோடியின் கேரண்டி 2024’ என்ற பெயரில் மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!’

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய வாக்குறுதிகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

இளைஞர்கள், பெண்கள், ஏழைகள், விவசாயிகள் என நான்கு தூண்களை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை. பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் ரூபாய் 1- க்கு வழங்கப்படும்; ஏழைகளுக்கு தரமான வீடுகள் அரசு சார்பில் கட்டித் தரப்படும்; 2025- ஆம் ஆண்டு பழங்குடியினரின் பெருமை ஆண்டாகக் கடைப்பிடிக்கப்படும், கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்படும்.

மக்கள் மருந்தகங்களில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும். தொன்மையான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், பொதுவான வாக்காளர் பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்படும், மேலும், 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும், சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும், கிராமங்களில் பைப் லைன் மூலம் கேஸ் விநியோகம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூபாய் 20 லட்சமாக அதிகரிக்கப்படும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளும் பயன்பெற வழிவகை செய்யப்படும், இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு என 4 திசைகளிலும் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும், வேலை வாய்ப்பு, முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீட்டிக்கப்படும், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் வரம்பு ரூபாய் 20 லட்சமாக அதிகரிக்கப்படும், திருவள்ளுவர் பெயரில் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும். சாலையோரம் வசிப்பவர்களுக்கு குறைந்த வாடகையில் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும், நாடு முழுவதும் புதிய ரயில் மற்றும் விமான நிலையங்கள் அமைக்கப்படும், இந்தியாவை மூன்றாவது பொருளாதார நாடாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

MUST READ