Homeசெய்திகள்இந்தியாசோலார் பேனல் அமைக்க SBI கடனுதவி

சோலார் பேனல் அமைக்க SBI கடனுதவி

-

மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ் சோலார் மின் உற்பத்திக்கு பேனல்களை நிறுவ கடன் பெறலாம் என்று எஸ்பிஐ (SBI) வங்கி தெரிவித்துள்ளது.10 KW திறன் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

சோலார் பேனல் அமைக்க SBI கடனுதவிவீடுகள், தொழிற்சாலைகளின் மேற்கூரையில் சோலார் பேனல்களை அமைக்க SBI கடனுதவி வழங்குகிறது. PM சூர்யா கர் திட்டத்தில் ஒரு 1KW சோலார் பேனல் அமைக்க ரூ.30,000, 2KW-க்கு ரூ.60,000, 3KW -க்கு மேல் ரூ.78,000 வரை மானியம் வழங்கப்படும் என்றும், மானியத் தொகை கடன் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குபவர் 70 வயதை அடையும் முன்னர் கடனை கட்டி முடிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், 65 வயது வரையிலான நபர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்றும், 680க்கு மேல் சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

MNRE/ REC இணையதளத்தில் விண்ணப்பதாரர் பதிவு செய்வது முதல் கடன் வழங்குவது வரை, SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம்.

MUST READ