Homeசெய்திகள்இந்தியாபலாத்கார வழக்கில் கைதானவரின் செல்போனில் அதிர்ச்சி... தோண்டத் தோண்ட வெளியாகும் வண்டவாளங்கள்..!

பலாத்கார வழக்கில் கைதானவரின் செல்போனில் அதிர்ச்சி… தோண்டத் தோண்ட வெளியாகும் வண்டவாளங்கள்..!

-

- Advertisement -

கிருஷ்ணகிரியில் பெண் கூட்டு பலாத்கார வழக்கில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட வாலிபரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில் அவர் பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தது தெரிய வந்தது.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும்,பெண் ஒருவரும் கடந்த 19ம் தேதி கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மலை பகுதிக்கு சென்றபோது அங்கு போதையில் இருந்த 4 வாலிபர்கள் அவர்களை கத்தி முனையில் மிரட்டி அவர்கள் வைத்திருந்த ரூ.7 ஆயிரம் ரொக்கம், மற்றும் நகையை பறித்தனர். அவர்களின் செல்போனை பிடுங்கி ஜி-பே மூலமாக ரூ.7 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர்.

அந்த நபர்களில் 2 பேர் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை உடன் இருந்த 2 பேர் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் பெண்ணிடம் வழிப்பறி செய்தது கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த கலையரசன் (21), அபிஷேக் (20) என்றும், பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது கிருஷ்ணகிரியை சேர்ந்த சுரேஷ் (22), நாராயணன் (21) என தெரிய வந்தது.

அவர்களில் கலையரசன், அபிஷேக் கடந்த 20ம் தேதி இரவு கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த சுரேஷ், நாராயணனை போலீசார் தேடி வந்தனர். நேற்று அவர்கள் பெரு பொன்மலை குட்டை பக்கமாக இருப்பதாக தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது சுரேஷ், நாராயணன் இருவரும் போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு தப்ப முயன்றனர். இதில் போலீசார் சுரேசின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். நாராயணன் கீழே விழுந்ததில் இடது கால் முறிந்தது. அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தாக்குதலில் காயம் அடைந்த போலீசார் குமார், விஜயகுமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் சுரேசிடம் இருந்து செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில், ஏராளமான பெண்களை சுரேஷ் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சிகள் உள்ளன. மலை பகுதிக்கு சென்ற பல பெண்களை சுரேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் மிரட்டி வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ததும், அதை சுரேசின் கூட்டாளிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததும் தெரிய வந்தது.

10க்கும் மேற்பட்ட வீடியோக்கள் சுரேசின் செல்போனில் இருந்ததாக கூறப்படுகிறது. அவனால் மொத்தம் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வீடியோக்கள் யார் யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும், செல்போனை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ