Homeசெய்திகள்இந்தியா'சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள்'- திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

‘சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள்’- திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

-

 

 

திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள் வரும் ஜூலை 25- ஆம் தேதி இணையவழி மூலம் வெளியிட உள்ளதாக திருப்பதி திருமலைத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!

ஆந்திராவில் உள்ள உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெருமாளைத் தரிசிக்க ஒவ்வொரு முறையும் இரண்டு மாதங்களுக்கு சேர்த்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் இணையவழி மூலமாக டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.

வரும் ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களுக்கு ஏற்கனவே நாளொன்றுக்கு 11,000 டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், நாளொன்றுக்கு 4,000 டிக்கெட்டுகள் கூடுதலாக வெளியிடப்படவுள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?

இது தவிர அக்டோபர் மாதத்திற்கு மட்டும் நாளொன்றுக்கு 15,000 டிக்கெட்டுகள் வெளியிடப்படவுள்ளன. இந்த டிக்கெட்டுகளை www.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ