ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு இன்று டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா!
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவைக்கான தேர்தல் நடந்தது. தேர்தலில் . தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மாநிலத்தின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பொறுப்பேற்றுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் முதல் சட்டமன்ற கூட்ட தொடர் நவம்பர் 4ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தலைநகர் டெல்லி சென்றுள்ள ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். நேற்றைய தினம் குடியரசுத் துணைத் தலைவரை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் உமர் அப்துல்லா சந்தித்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பேசிய நிலையில் இன்று குடியரசு தலைவரை குடியரசு தலைவரும் மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்ட பலரையும் டெல்லியில் உமர் அப்துல்லா சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் : ராகுல், பிரியங்கா, கார்கே உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி