நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அவைக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற அடுத்தடுத்த பரபரப்புச் சம்பவங்களால் தலைநகர் டெல்லி முழுமையாக ஸ்தம்பித்தது.


நீட் விவகாரம் & நுழைவுத் தேர்வு குளறுபடி: நாடாளுமன்றம் முற்றுகை!
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் 22 நாட்களாக மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவும், நீட் (NEET), கியூட் (CUET) போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் ‘சி.ஜே.பி’ (CJP) அமைப்பின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். அமைதியாகத் தொடங்கிய இந்த பேரணியைத் தடுத்து நிறுத்தக் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்:
இணைய சேவை முடக்கம்:
மாணவர்களின் தொடர்பைத் துண்டிக்கும் விதமாகத் தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டன.

கண்ணீர் புகை மற்றும் தடியடி:
நாடாளுமன்றத்தை நெருங்க முயன்ற போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைக்க முயன்றனர்.
பாதுகாப்பு தீவிரம்:
அசம்பாவிதங்களைத் தவிர்க்க நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டு, சி.ஐ.எஸ்.எஃப் (CISF) படைவீரர்கள் துப்பாக்கி ஏந்திய தீவிரப் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவைக்குள் எதிரொலித்த எதிர்ப்புகள்:
நாடாளுமன்ற அவைகளுக்குள் எதிர்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்:
நீட் தேர்வு முறைகேடு:
நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
மேக்கேதாட்டு அணை விவகாரம்:
மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து உடனே அவையில் விவாதிக்க வேண்டும் எனத் திமுக உறுப்பினர்கள் பதாகைகளுடன் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். அமளி காரணமாக அவையின் நடவடிக்கைகள் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன
