spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதமிழ்நாடு விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து!

தமிழ்நாடு விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து!

-

- Advertisement -

 

தமிழ்நாடு விரைவு ரயிலில் திடீர் தீ விபத்து!
File Photo

தெலங்கானா மாநிலம், பேலம்பள்ளி அருகே தமிழ்நாடு விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து உடனடியாகக் கண்டறியப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

we-r-hiring

கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!

டெல்லியில் இருந்து சென்னைக்கு தமிழ்நாடு விரைவு ரயில் வந்துக் கொண்டிருந்தது. தெலங்கானா மாநிலம், பேலம்பள்ளி அருகே வந்த போது, ஏசி பெட்டியின் அடியில் இருந்து புகை வந்துள்ளது. இது தொடர்பான ஓட்டுநருக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.

பின்னர், ஏசி பெட்டியின் அடியில் பார்த்த போது, தீ பற்றி எரிந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக ரயில்வே காவலர்கள், தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு ரயில் பேலம்பள்ளி ரயில் நிலையத்தைச் சென்றடைந்தது.

அங்கு ரயில்வே பொறியாளர்கள் மற்றும் காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில், ஆய்வு மேற்கொண்டனர். வெப்பம் மற்றும் உராய்வுக் காரணமாக, தீப்பற்றி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

“நாடாளுமன்றத் தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது”- வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பின்னர், ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

MUST READ